
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுச் சேவைத் துறையில் வேலை வாய்ப்பு சம்பந்தமாகத் தாம் கூறிய செய்தியைத் திரித்து வெளியிட்டு பிரச்சினையை உருவாக்கிய இரு ஊடகங்களின் மீது பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நிந்தனை வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
அரசுத் துறையில் நிலவும் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை உடைத்தெறிய வேண்டுமென்று தாம் கூறியதாக அந்த இரு ஊடகங்களும் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
திரிக்கப்பட்ட செய்தியின் மீது பலரும் தம்மைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இனப் பாகுபாடு காட்டாமல் எல்லா இனங்களுக்கும் பாகுபாடில்லாமல் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று மட்டுமே தாம் அறைகூவல் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அது டாக்டர் ராமசாமியின் தனிப்பட்ட கருத்து என்பதால் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.



