
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்தாங்காலி சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியானதாக அறிவித்திருக்கும் சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் Ng Suee Lim (இங் சுவீ லிம்) மீது தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹருமைனி ஒமார் தெரிவித்தார்.
அது சம்பந்தமாக சபாநாயகர் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த விஷயத்தைத் தமது நண்பர்களின் மூலமாகத் தெரிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். தம்மை பதவியில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளாதாக அவர் குறிப்பிட்டார்.
இது எதிர்க்கட்சியினர் மீதான பாகுபாடு என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், தாம் கடந்த 6 மாதங்களாக சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளத் தவறியதற்குத் தகுந்த காரணம் எதையும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



