
🔊To listen to this news in Tamil, Please select the text.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியேற்ற காலகட்டத்தில் அமைச்சர்களின் அரசு வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகள் அதிகம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
2020இல் பராமரிப்புச் செலவு 672,000 ரிங்கிட்டாக இருந்த வேளையில், 2021இல் அது 478,991.50 ரிங்கிட்டாகவும் 2022இல் 450,690.66 ரிங்கிட்டாகவும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
2020லிருந்து 2022ஆம் ஆண்டு வரை பராமரிப்பின் மொத்த செலவினம் 1,601 மில்லியன் ரிங்கிட்டாகும்.
2020 மார்ச் 10இல் பதவியேற்ற முஹிடின் அமைச்சரவையில் 32 அமைச்சர்களும் 38 துணையமைச்சர்களும் இருந்துள்ளனர்.
2021 ஆகஸ்டு 21இல் இருந்து 2022 அக்டோபர் 10ஆம் தேதி வரை இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



