30.4 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

கெவின் மொரைஸைக் கொன்றவர்களின்
மேல் முறையீடு ஒத்தி வைப்பு

🔥 Views : 27
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

2015 செப்டம்பர் 4ஆம் தேதி அரசு துணை வழக்கறிஞர் Kevin Morais (கெவின் மொரைஸை) கொன்று, தோம்பில் வைத்து சிமெண்டு பூசி, கால்வாயில் எறிந்த 6 பேர் மீது 2020 ஜூலை 10ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து அந்த அறுவரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். மேல் முறையீட்டுக்கான விசாரணை மார்ச் 3ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்ப்பினை எதிர்த்து நால்வர் மேல் முறையீட்டுக்கான எழுத்துப் பூர்வ வாதத் தொகுப்பு அறிக்கையை சமர்ப்பித்திருந்த வேளையில், இருவரின் வழக்கறிஞர்கள் அதனை இன்னமும் செய்யாமல் இருப்பதால், மார்ச்சில் நடக்க இருந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கெவின் மொரைஸை திட்டமிட்டுக் கொன்றதாக ஏ கே தினேஸ் குமார், எம். விஷ்வநாத், எஸ். நிர்மலன், எஸ். ரவிசந்திரன், ஆர். தினேஸ்வரன், டாக்டர் ஆர். குணசேகரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா மரண தண்டனை விதித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles