32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்: ஒரே நேரத்தில் நடத்த கலந்தாய்வு

🔥 Views : 3
👁 Reading Now : 56

🔊To listen to this news in Tamil, Please select the text.

இவ்வாண்டு நடத்தப்படவிருக்கும் 6 மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஆட்சியின் கீழுள்ள சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பாஸ் கட்சி வசமுள்ள கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய சட்டமன்றங்களின் தவணைக் காலம் மே மாதம் முடிவடைவதால், அவற்றிற்கான தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடத்தப்பட வேண்டும்.
இந்த மாநிலங்களின் மந்திரி பெசார்கள், முதலமைச்சர் ஆகியோர் அதில் கலந்து கொண்டு ஒருமித்த கருத்தை எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles