
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுத்தேர்தல் காலத்தில் பெர்சத்துவுக்குக் கிடைத்த 30 கோடி ரிங்கிட் நிதி பற்றி அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
2020 மார்ச்சில் இருந்து 2021 ஆகஸ்டு வரை முஹிடின் யாசின் பிரதமராக இருந்தபோது, அவர் மூலம் அரசு குத்தகை கிடைத்த ஒப்பந்தக்- காரர்கள் அவருக்கு அரசியல் நன்கொடை என்ற பெயரில் நிதி வழங்கியிருக்கும் சந்தேகத்தின் பேரில் அந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், பெர்சத்து தலைவர்கள் பலரிடம் எம்ஏசிசி விசாரணை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. ஜனவரி மாதம் பெர்சத்துவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



