
🔊To listen to this news in Tamil, Please select the text.
தாம் துன் மகாதீரை விட வஞ்சம் தீர்க்கும் நபராக சித்திரித்திருக்கும் பெண்டாங் எம்பி Awang Hashim (அவாங் ஹாஷிம்) 3 நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒரு எம்பியாக இருக்கும் அவாங், தமது பொறுப்பை உணராமல், தம்மைப் பழி வாங்கும் கொடுமைக்காரராக சித்திரித்து நிந்தித்திருப்பது வேண்டுமென்றே தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தீய நோக்கம் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோந்துக் கப்பல் கட்டுமானத்தில் சம்பந்தப்பட்ட துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் மீது அன்வார் நடவடிக்கை எடுக்காதது, எதிர்க்கட்சியினர் மீது பழி வாங்குவதாகவும் அணுக்கமானவர்களுக்கு சலுகை காட்டும் செயலென அவாங் குற்றம் சாட்டியிருந்தார்.
தமது செயலுக்கு அவாங் பொது மன்னிப்பு கேட்பதோடு, அம்மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டை தம்மீது மீண்டும் கூறாமலிருக்க உறுதி கூற வேண்டும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென்றும் அன்வார் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்



