27.9 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

முஹிடினை ஊழல் வழக்கில் சிக்க வைக்க
வான் சைஃபுல் மீது குற்றச்சாட்டா?

🔥 Views : 14
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை ஊழல் வழக்கில் சிக்க வைக்க, அதன் தகவல் பிரிவுத் தலைவர் Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜானுக்கு) 10 மில்லியன் ரிங்கிட்டை ஊழல் தடுப்பு ஆணையம் வழங்க முன்வந்துள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வான் சைஃபுல்லின் தனிப்பட்ட ஆய்வாளர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர், அண்மையில் டிக் டோக் செயலியில் 44 விநாடிகள் ஓடும் பதிவொன்றை வெளியிட்டு அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
அந்தப் புகாருக்குப் பதிலளித்திருக்கும் எம்ஏசிசி தலைவர் Azam Baki (அஸாம் பாக்கி), இது எம்ஏசிசிக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிக்கும் செயலென்றும் அது ஆணையத்திற்கு மக்களிடையே நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டு, அந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஸாம் பாக்கி எச்சரித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles