
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூரில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் 6 மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களை நடத்த ஏதுவாக ஜூன் மாத மத்தியில் அவற்றின் சட்டமன்றங்களைக் கலைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் Amiruddin Shaari (அமிருடின் ஷாரி) தெரிவித்தார்.
இந்த முடிவு கட்சித் தலைமைத்துவத்திடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் பேரரசரின் ஒப்புதல் பெறப்படும் என அவர் தெரிவித்தார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் திரெங்கானு மந்திரி பெசார் டாக்டர் Amad Samsuri Mokhtar (அமாட் சம்சூரி மொக்தார்), கெடா மந்திரி பெசார் Muhammad Sanusi Md Nor (முகமட் சனுசி மாட்), கிளந்தான் மந்திரி பெசார் Ahmad Yakob (அமாட் யாக்கோப்), பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow (செள கோன் யியோவ்), நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் Aminuddin Harun (அமினுடின் ஹருண்) ஆகியோர் கலந்து கொண்டனர்.



