
🔊To listen to this news in Tamil, Please select the text.
GST எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரி மீண்டும் அமல்படுத்தப்படும் சாத்தியத்தை பொருளாதார அமைச்சர் ரபிஷி ரம்லி மறுக்கவில்லை. ஜி.எஸ் .டி வரி அமலாக்கம் கால நேரத்தை பொறுத்து அமையும் என அவர் கூறினார். ஒரு காலத்தில் நஜீப் நிர்வாகத்தின் ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான இயக்கத்திற்கு பண்டான் எம்.பியான ரபிஷி ரம்லி தலைமையேற்றிருந்தார்.
ஆனால் இப்போது ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்துவதில் தாம் ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை என்று நடப்பு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடையே உரையாற்றியபோது அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஜி.எஸ்,டியை அமல்படுத்தவேண்டும் என்ற செயல்திட்டம் ஏற்புடையதாக இல்லை. வருமானத்திற்காக ஜி,எஸ்,டி அமல்படுத்த வேண்டும் என்றால் இந்த நிலைமை தொடர வேண்டும் என்ற சிந்தனை வந்துவிடும் என ரபிஷி சுட்டிக்காட்டினார்.



