
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், புதிய அரசியல் கட்சியில் இணைவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக, Ketereh- வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Annuar Musa கூறியுள்ளார்.
அதையடுத்து சாதாரண உறுப்பினராக தம்மை சேர்த்துக் கொள்வதற்கு எதாவது ஒரு கட்சி முன்வருமென , தமது முகநூலின் வாயிலாக அவர் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
15-வது பொதுத் தேர்தலுக்குப் பின், அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட அனுவார் மூசா, தமக்கு எதிரான அந்த நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



