26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

புத்ராவில் இணைந்த துன் மகாதீர் மீண்டும் இனவாதத்தை முன்னெடுக்கிறார்

🔥 Views : 2
👁 Reading Now : 56

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமது ஆதரவாளர்கள் 12 பேருடன் பெஜுவாங்கிலிருந்து விலகிய துன் மகாதீர், மக்களின் ஆதரவைத் திரட்ட இனவாதத்தைக் கையிலெடுத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறும்போது மலாய்க்காரர்கள் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மேலோங்கி இருந்த காலம் மாறி, நலிந்து வருவதாகவும் மலாய் சமூகம் நாட்டில் குடியேறிய அந்நிய சமூகத்திற்கு சேவகம் புரியும் நிலை வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கிய மலாய்க்காரர்கள் பின் தங்கினால், அவர்களின் எதிர்காலம் சூன்யமாகவே மாறும் என்றும் அவர் எச்சரித்தார். அதன் காரணமாகத்தான் தாம் இறக்கும் வரை மலாய் ஆதிக்கத்திற்காகப் பாடுபட கங்ஙணம் பூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த மாதத் தொடக்கத்தில் அவர், அரசு நாடாளுமன்ற எல்லைகளை மாற்றம் செய்யும்போது, மலாய் பெரும்பான்மை கொண்ட தொகுதிகள் குறையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles