
🔊To listen to this news in Tamil, Please select the text.
விநியோக மசோதாவில் உரையாற்றிய பின்னர் பாஸ் கட்சியின் உதவியோடு ஆராவ் தொகுதியில் போட்டியிட்டு வென்ற Shahidan Kassim (ஷஹிடான் காசிம்), உலு லங்காட் அமானா எம்பியான Sany Hamzan (சானி ஹம்ஸான்) மக்களவையில் நடந்து கொண்ட விதம் குரங்கை விட மிகவும் மோசமானதாக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கிடையே பெரும் மோதலை உருவாக்கியது.
அந்தக் கூற்றினை கடுமையாக எதிர்த்த சானி, அந்த உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார்.
அதனையடுத்து, சபாநாயகர் ஜொஹாரி அப்துல், மூத்த தலைவராகவும் பல தவணைகளில் எம்பியாகவும் இருந்துள்ள ஷஹிடான் காசிம் அம்மாதிரி பேசியது சரியல்லவென்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து தாம் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி ஷாஹிடான் கேட்டுக் கொண்டார்.



