
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் முட்டை தட்டுப்பாட்டைக் களைவதற்கு இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் Mohamad Sabu (முகமட் சாபு) மக்களவையில் தெரிவித்தார்.
குத்தகை பெற்ற நிறுவனம் 2022இல் காத்தாரில் நடைபெற்ற ஃபிபா கால்பந்து போட்டியின்போது, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்து உதவிய அனுபவத்தின் அடிப்படையில், அந்த நிறுவனம் முட்டை இறக்குமதி செய்துதர தேர்ந்தெடுக்கப்பட்டதாக தாசேக் குளுகோர் எம்பி வான் சைஃபுல் வான் ஜான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது முகமட் சாபு இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்தது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
முகமட் சாபு மேலும் கூறும்போது, 2018இல் 13.4 மில்லியன், 2019இல் 10.9 மில்லியன், 2020இல் 12.9 மில்லியன், 2021இல் 13.6 மில்லியன் மற்றும் 2022இல் 13.3 மில்லியன் முட்டைகள் உற்பத்தியாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 2.4 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் ஆண்டொன்றுக்கு 11.6 மில்லியன் முட்டைகள் தேவைப்படுவதாகவும் முகமட் சாபு தெரிவித்தார்.



