
🔊To listen to this news in Tamil, Please select the text.
இளம் தலைமுறையினர் அம்னோவை ஒதுக்கித் தள்ளி, பெரிக்காத்தானை ஆதரிக்கத் தொடங்கி இருப்பதாக பெர்சத்துவின் முன்னாள் தொடர்புத் தலைவரும் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான Wan Saiful wan Jan (வான் சைஃபுல் வான் ஜான்) குறிப்பிட்டுள்ளார்.
15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அசுர பலம் கொண்டதாக பெர்சத்து வியாபித்து மக்களுக்கு ஏற்புடைய சேவையை வழங்கக் கூடியதாகவும் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உருமாறி வருவதாக அவர் சுட்டிக்கட்டினார்.
இதன் காரணமாகத்தான் அம்னோவை விட பெர்சத்து 5 தொகுதிகளைக் கூடுதலாக வெற்றி கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெர்சத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 21ஆம் தேதி வான் சைஃபுல் ஊழல் வழக்கில் கைதாவதற்கு முன்னர் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.



