25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

காணாமல் போன பத்திரிகையாளர் பாகிஸ்தான் சிறையில் அடைப்பு

🔥 Views : 2
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் அடைக்கலம் நாடியிருந்த பாகிஸ்தானிய பத்திரிகையாளர் கடந்தாண்டு ஆகஸ்டில் இருந்து காணாமல் போய் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தால் தேடப்பட்ட Syed Fawad Ali Shah, (41) நாடு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்ததை அடுத்து, அதனைப் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், அவரது மனைவி சையீடா ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், அவர் சொந்த நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவரம் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது.
இது வரை அவர் பாகிஸ்தானில் இல்லையென்று சாதித்து வந்த அந்நாட்டு அமலாக்கத் துறை, தற்போது அவர் அடைய்லா சிறைச்சாலையில் இருப்பதாக ஒப்புக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர் வேதமூர்த்தி தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்ட பின்னர், இரு நாள்களுக்கு முன்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்- பட்டதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles