
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒற்றுமை அரசாங்கம் இஸ்லாமிய வழியில் ஜனநாயகக் கொள்கையோடு ஆட்சி நடத்துவதாக மார் தட்டினால், அது எல்லா கட்சிகளுக்கும் பாகுபாடில்லாமல் சமமான ஒதுக்கீட்டை வழங்க முன்வர வேண்டுமென பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறைகூவல் விடுத்தார்.
நேர்மையான அரசாக இருந்தால் எதிர்க்கட்சிகளின் உரிமைக்கும் மரியாதை தர முன்வர வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசாங்கம் நியாயமான ஆட்சியை நடத்தினால், அது எதிரிகளைக் கூட மதித்து அவற்றின் உரிமைக்குத் தகுந்த கெளரவத்தைத் தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
பெரிக்காத்தானுக்கு ஆளும் கட்சியைப் போலவே சமமான மானியத்தை வழங்கி மக்களின் நலனுக்கு உதவ வேண்டுமென அப்துல் ஹாடி அவாங், பெரிக்கத்தானின் செயலாளர் Hamzah Zainuddin (ஹம்ஸா ஸைனுடின்), ஆராவ் எம்பி shahidan Kasim (ஷாஹிடான் காசி)மும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.



