
🔊To listen to this news in Tamil, Please select the text.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மிகுந்த பத்திங்கி அலி பவளப்பாறை பகுதிக்கு அருகே அமைந்திருக்கும், மலேசியாவின் ZEE பொருளாதார மண்டலத்தை உட்படுத்திய நீரிணைப் பகுதியில், சீன கடற்படை கப்பல்கள் இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சீன கடற்படையின் மிக பெரிய இராட்சத கப்பலாக விளங்கும், 12 ஆயிரம் டன் எடை கொண்ட ‘The Monster’ கப்பல் சரவாக் கடற்கரையிலிருந்து, 55 கடல் மைல் தூரத்தில் பயணம் செய்கிறது.
தென் சீனக் கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள அக்கப்பல்கள் அங்கு வட்டமிடுவதாக நம்பப்படுகிறது.
எனினும், நாட்டின் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழையும் சீன கப்பல்கள், மலேசியாவுக்கு சவால்விடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.



