31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நீதிபதியின் மீது விசாரணை நடத்த அனுமதி வேண்டுமா?

🔥 Views : 2
👁 Reading Now : 62

🔊To listen to this news in Tamil, Please select the text.

குற்றம் புரிந்த நீதிபதி ஒருவரின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவதற்கு யாருடையை அனுமதியும் தேவையில்லை என முன்னாள் தலைமை நீதிபதி Abdul Hamid Mohamad (அப்துல் ஹமிட் முகமட்) குறிப்பிட்டுள்ளார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் முன் அனுமதி வேண்டுமென அரசமைப்பு விதியில் குறிப்பிடாத போது, தலைமை நீதிபதியின் அனுமதியின் பேரில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டு- மென்பது வியப்பை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் அம்மாதிரியான் விதிமுறை அனுசரிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு தண்டனை விதித்த நீதிபதி Nazlan Ghazali (நஸ்லான் கஸாலி)யின் வங்கிக் கணக்கில் 1 மில்லியன் ரிங்கிட் பணம் வரவு வைக்கப்பட்ட விவகாரத்தில், எம்ஏசிசி தன்மூப்பாக விசாரணை நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூட்டரசு நீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles