
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிறப்பாகச் செயல்படும் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க கனவு காணும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை யாரும் தடுக்க முடியாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் ஆசையைத் தடுக்க தமக்கு உரிமை இல்லையென்றும் அவரால் முடிந்ததை செய்யட்டும் என்றே விட்டு விட வேண்டுமென்றும் அன்வார் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை ஹாடி அவாங் கடுமையாகச் சீண்டி, அதன் உறுப்புக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் ஐந்தாண்டு கால தவணை முடியும் முன்னரே அது கவிழ்ந்து விடும் என அவர் அடிக்கடி ஆரூடம் கூறி வருகிறார்.
ஒற்றுமை அரசாங்கம் கவிழ்ந்தால் நிச்சயமாக பெரிக்காத்தானே ஆட்சி அமைக்கும் என்றும் அது கொல்லைப்புற வழியாக வரும் அரசாக இருக்காது என்றும் ஹாடி அவாங் குறிப்பிட்டு வருகிறார்.



