26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜொகூர் வெள்ளப் பாதிப்புக்கு 5 கோடி ரிங்கிட் மானியம்

🔥 Views : 2
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜொகூர் மாநிலத்திற்கு கூட்டரசு அரசாங்கம் உடனடி நிவாரண நிதியாக 5 கோடி ரிங்கிட்டை அங்கீகரித்துள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த நிதியானது பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும் வெள்ளத் தடுப்புக்கும் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சில அமைச்சர்கள் அங்கு ஏற்கெனவே சென்று விட்டதாகவும் இன்றும் சிலர் இன்று செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் தாமும் அங்கு சென்று வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடவும் பாதிக்கப்- பட்டோருக்கு ஆறுதல் கூறப் போவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பேரிடர் மேலாண்மை அமைப்புக்கான செலவுகளுக்காக 10 கோடி ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜொகூரில் 217 துயர் துடைப்பு மையங்களில் 33,149 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles