29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மாது ஒருவரிடம் கொள்ளையடித்த 3 முகமூடித் திருடர்கள் கைது

🔥 Views : 7
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிப்ரவரி 16ஆம் தேதி காப்பார் ஜாலான் மொக்தாரில் மாது ஒருவரிடம் கொள்ளையடித்த முகமூடித் திருடர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையில் அந்த மூவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயா ராவ் தெரிவித்தார்.
மார்ச் 1ஆம் தேதி இரவு மணி 8.20க்கு 36இல் இருந்து 43 வயதுடைய இருவர் தாமான் செந்தோசாவிலும் 46 வயதான நபர் ஜாலான் டத்தோ யூசோப் ஷாபுடினில் மார்ச் 2ஆம் தேதி பின்னிரவு 12.05 மணியளவிலும் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஹொண்டா கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் எண் பட்டை போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அம்மூவருக்கும் குற்றப் பதிவு உண்டு என சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles