29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

102 மலேசியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது

🔥 Views : 6
👁 Reading Now : 35

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் பினாங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 102 மலேசிய தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி, அந்நியத் தொழிலாளர்களை அதன் நிர்வாகம் அமர்த்தியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார், அவர்களை உதாசீனம் செய்துவிட்டு அந்நியர்களுக்கு வேலை வழங்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மேற்கண்ட நிர்வாகம் புதிதாக நியமித்த அந்நியர்களை நீக்கிவிட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தியிருப்பதாக சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles