
🔊To listen to this news in Tamil, Please select the text.
மார்ச் 16ஆம் தேதி முதல் கோலாலம்பூர் கெண்டோன்மெண்ட்டில் இருந்து புத்ரா ஜெயா வரைக்குமான எம்ஆர்டி சேவை தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
இதன் குவாசா டமான்சாராவிலிருந்து கம்போங் பத்து வரைக்குமான செவை கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பின்னர், இரண்டாம் கட்டமான கம்போங் பத்துவிலிருந்து புத்ரா ஜெயா வரைக்குமான சேவை தொடங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகரின் எம் ஆர்டி3 எம்ஆர்டி திட்டம் பூர்த்தி அடைந்த பின்னர், முழுமையான எம்ஆர்டி போக்குவரத்து முற்றுபெறும் என அவர் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவுக்குச் செல்லும் எம்ஆர்டி 57.7 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகவும் அதில் 36 ரயில் நிலையங்கள் அடங்கியிருக்கும் என்றும் இச்சேவையைப் பயன்படுத்தி தினந்தோறும் 104,000 பேர் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.



