34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோட்டாவை நிரப்ப மட்டுமே பெண்களை மேல் மட்டப் பதவிகளில் நிரப்பக் கூடாது

🔥 Views : 3
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெண்களுக்கு கோட்டா முறையிலான மேல் மட்டப் பதவிகளுக்கான ஒதுக்கீடை நிரப்ப மட்டுமே கவனத்தைச் செலுத்துவதை விடுத்து, அப்பதவிகளுக்குத் திறன், தகுதி அடிப்படையில் பெண்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புவதே சிறப்பாக இருக்கும் என முன்னாள் அனைத்துலக வர்த்தகத் துறை அமைச்சர் Rafidah Aziz (ரஃபீடா அஸிஸ்) வலியுறுத்தினார்.
உலகளாவிய சந்தை போட்டித் தன்மை மிக்கதாகவும் சிக்கலானதாகவும் உருவாகி வரும்போது அதனை எதிர்கொண்டு வெற்றிபெற தகுதியும் திறமையும் முக்கியமாகத் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் வெற்றி பெற திறன், போட்டியிடும் தன்மை, காரியமாற்றும் துணிவு போன்றவை முக்கியமானதாகும். எனவே, கோட்டாவைப் பூர்த்தி செய்வதை விடுத்து அரசுப் பணிகளிலும் அரசு சார்பு நிறுவனங்களிலும் தகுதியான, திறமையான பெண்களையே நியமிக்க வேண்டுமென ரஃபிடா கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கான 30 விழுக்காடு கோட்டா முறையானது 2018ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கினால் அறிமுகப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles