28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கைது செய்யப்பட்ட பெர்சத்து பொருளாளர் விடுவிப்பு

🔥 Views : 3
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

இரு நாள்களுக்கு முன்னர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட பெர்சத்துவின் பொருளாளர் Salleh Bajuri (சாலே பஜுரி) நேற்று விடுவிக்கப்பட்டதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Razali Idris (ரஸாலி இட்ரிஸ்) தெரிவித்தார்.
அவரின் கைதானது கட்சிக்குச் சிறுமையை ஏற்பட்டுத்தி பலவீனப்படுத்துவதே நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
அவர் கட்சியின் பணத்தைத் தமது சொந்தக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் கட்சியின் வரவு செலவு கணக்குகள் யாவும் தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டு சங்கங்களின் பதிவதிகாரியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சி பெர்சத்துவை சீண்டி அதனை நிலைகுலைய வைப்பதற்காகப் பெர்சத்து தலைவர்களைக் கைது செய்து வருவதாகவும், இது இனி மேலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் தாசேக் குளுகோர் எம்பி Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜான்), சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் Adam Radlan Adam Muhammad (அடாம் ரட்லான் அடாம் முகமட்) ஆகியோர் கைது செய்யப்ப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்-தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles