
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் உட்பட 6 மாநிலங்களில் வெள்ளத்தினால் 185 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், சரவாக் ஆகிய மாநிலங்களோடு வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையினால் சிலாங்கூரில் சுங்கை பூலோ, கோல சிலாங்கூரிலும் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜொகூரில் வெள்ள நிலைமையைச் சமாளிக்க கூடுதல் ஆள்பலம் தேவையென அறைகூவல் விடுக்கப்பட்டது. அங்கு வெள்ள நிலைமையைச் சமாளிக்க 5 கோடி ரிங்கிட் மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜொகூர் துயர் துடைப்பு மையங்களில் மூவருக்கு கோவிட் நோய் தாக்கி, மருத்துவமனையில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூரில் சிகாமாட், குளுவாங், பகாங்கில் ரொம்பின், பெக்கான் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜொகூர் தங்காக், மூவார், பத்து பகாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலானில் ஜெம்போல், தம்பின், மலாக்கா, சரவாக் ஆகிய மாவட்டங்கத்தில் வெள்ள அபாயம் கடுமையாகலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



