
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடளாவிய நிலையில் நேர்ந்திருக்கும் வெள்ளப் பாதிப்பில் ஆயிரக் கணக்கானோர் பாதிப்படைந்ததைக் கருத்தில் கொண்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் வழிகாட்டுதலின் பேரில் Pusat Khidmat Masyarakat DUN Sentosa, Persatuan Sejahtera Sentosa Selangor ஆகிய அமைப்புகள் ரொக்க, பொருள் நன்கொடையைச் சேகரிக்கத் தொடங்கி உள்ளனர்.
குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், பேம்பர்ஸ், பெண்களுக்கான துண்டு, டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், முட்டை, கோப்பி, தே தூள், சவர்க்காரம், உலர்ந்த உணவு வகைகள், பீங்கான் தட்டுகள் ஆகிய பொருள்களைப் பொதுமக்கள் வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அவற்றை வழங்க திரு நரேன் என்பவருடன் 010-4334990 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ரொக்க உதவியை வழங்க விரும்புவோர் அதனை CIMB (சிஐஎம்பி) வங்கிக் கணக்கு 8604-32-4992 எனும் எண்ணில் செலுத்த வேண்டுமென்றும், அதற்கான வங்கி அறிக்கையை நரேனிடம் அனுப்பினால், அதற்கான ரசீது வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. .
சக மலேசியர்கள் எதிர்நோக்கும் துயரில் பங்கு கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவியையும் ரொக்க நன்கொடையையும் பொதுமக்கள் தாராள மனத்தோடு நல்க வேண்டுமென டாக்டர் குணராஜ் கேட்டுக் கொள்கிறார்.
