
🔊To listen to this news in Tamil, Please select the text.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது போல ஒற்றுமை அரசாங்கம் எக்காரணத்தைக் கொண்டும் கவிழாது என்றும் அது இந்த ஐந்தாண்டு காலத் தவணையை எவ்விதப் பிரச்சினையும் இன்றி பூர்த்தி செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிபட குறிப்பிட்டார்.
ஹாடியின் அறிவிப்பானது அரசியலின் கேலிக் கூத்து என்றும் அவரது ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தவே அவ்வாறு பிதற்றுகிறார் என அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ஹாடி அவாங், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க தங்களுக்கு உரிமையுண்டு என்றும் பக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளிடையே பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி அது சுயமாகவே கவிழும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.



