
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தபோது, சிகாமாட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா நியூ சிலாந்துக்கு 55 நாள் விடுமுறையில் சென்றது மாபெரும் தவறு என்று நஜிப் ரசாக் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு, நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தபோது, நியூ சிலாந்தில் உள்ள தமது குடும்பத்தினரோடு தங்கியிருக்கச் சென்ற நிலையில், ஒரு எம்பிக்கான தார்மீகக் கடமையிலிருந்து அவர் தவறிவிட்டதாக நஜிப் குறிப்பிட்டார்.
மக்களோடு மக்களாக அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்வதே ஒரு தலைவருக்கான நெறியென்றும் கடமை- யென்றும் நஜிப் சுட்டிக்கட்டினார்.
தாம் விடுமுறைக்குச் சென்றதைத் தவறாக நிந்தித்து, சித்திரித்த பத்து தொகுதி எம்பி பி. பிரபாகரன் மீது சந்தாரா தொடுத்துள்ள வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நஜிப், அவ்வாறு தமது கருத்தைக் கூறியது குறிப்பிடத்தக்கது.



