28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

உலு சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி கட்டுமானத் திட்டத்தில் மோசடி
ஒப்பந்தக்காரர் மீது வழக்கு

🔥 Views : 3
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

உலு சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி ஒன்றின் வகுப்பறை கட்டுமானத் திட்டத்தில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து 285,000 ரிங்கிட்டை ஏமாற்றியதாக சிவணேசன்(35) என்பவர் மீது ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் கட்டுமானத் திட்டத்தைப் பொதுப் பணித்துறை அங்கீகரித்ததாகக் கூறி, தவறான ஆவணங்களைக் காட்டி சிவணேசன் அச்சங்கத்தை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2016 ஆகஸ்டு 24இல் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி வரை சுங்கை பூலோவில் உள்ள வங்கியில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை, தண்டம் மற்றும் பிரம்படியும் அளிக்கப்படும். சிவணேசனுக்கு ஒருவர் உத்தரவாதத்துடன் 12,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles