28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பினாங்கு தீவு கெடாவுக்கு சொந்தமா?

🔥 Views : 4
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

வரலாற்றுத் தரவுகளின்படி, பினாங்கு தீவு கெடாவுக்கே சொந்தம் என அலோர்ஸ்டார் எம்பி அப்னான் ஹமிடி கூறி மக்களவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகப் பத்திரிகைப் பிரிவு 1971ஆம் ஆண்டு வெளியிட்ருள்ள புத்தகத்தின்படி, பினாங்கு கெடாவுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
பிரிட்டிஸாரின் காலத்தில் கெடா சுல்தான் பினாங்கை கவர்னர் பிரான்ஸிஸ் லைட்டிடம் ஒப்படைக்க இணங்கவில்லை. அது குத்தகைக்கு விடப்படவும் இல்லை, அதன் உரிமம் யாருக்கும் தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கான வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லை. எனவே, பிரான்ஸிஸ் லைட் அனைத்துலகச் சட்டத்தை மீறியுள்ளார். கெடா சுல்தான் அப்துல்லாவையும் ஏமாற்றினார் என அவர் சாடினார்.
அவரின் இந்த உரையை அடுத்து, மக்களவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பினாங்கின் தன்னாட்சி உரிமையின் மீது பாஸ் கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்புவதாக ஜெலுத்தோங் எம்பி ராயர் குறிப்பிட்டு சாடினார்.
இதனையடுத்து, அப்னானின் கூற்றை மீட்டுக் கொள்ளும்படி சபாநாயகர் ஜொஹாரி அப்துல் உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles