28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

இறுதிக் காரியத்திற்கான 20 ஆயிரத்தை சைஃபுடின் வழங்க முன் வந்தார்

🔥 Views : 3
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்த தமது மகன் இறந்து விட்ட தகவலைக் கேள்விப்பட்ட தம்பினினில் உள்ள தந்தை ஒருவர், அவருக்கான இறுதிக் காரியத்தைச் செய்து முடிக்க எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், சிறைத் துறையினர் அவரது மகன் இறக்கவில்லை என்றும் அவர் இன்னமும் உயிருடன்தான் இருப்பதாகத் தெரிவித்துப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
பின்னர், தந்தை நேரில் சென்று அதனை உறுதிப் படுத்திக் கொண்டார். உயிருடன் இருக்கும் மகன் இறந்து விட்டதாக அறிவித்திருக்கும் சிறைத் துறையின் தவறான போக்கினை ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் மக்களவையில் எழுப்பினார்.
இறுதிக் காரியத்திற்கு சம்பந்தப்பட்ட குடும்பம் வீணாகச் செலவிட்டதைக் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அதற்கு இழப்பீடாகத் தமது சொந்தப் பணம் 20 ஆயிரம் ரிங்கிட்டை அந்தக் குடும்பத்திற்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles