27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அதிவேக ரயில் திட்டத்தைத் தனியாருடன் இணைந்து மேற்கொள்ள சம்மதம்

🔥 Views : 3
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 350 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அதிவேக ரயில் திட்டத்தை(எச்எஸ்ஆர்) ஏற்று நடத்த தனியார் துறை முன்வந்தால், ரத்து செய்யப்பட்டிருக்கும் அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முன்வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ தெரிவித்தார்.
பெருஞ் செலவிலான அத்திட்டத்தை பெரிக்கத்தான் நேஷனல் அரசு 2021 ஜனவரி 1ஆம் தேதி ரத்து செய்ததோடு சிங்கப்பூருக்கு 32 கோடி ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அத்திட்டத்தை சிங்கப்பூர் தொடர வேண்டுமென அதன் அரசு விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணையமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் குறிப்பிட்டதை அடுத்து, அந்தோணி லோக் அரசின் கருத்தை வெளிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles