
🔊To listen to this news in Tamil, Please select the text.
திரெங்கானு மாநிலத்தில் பள்ளிவாசல்களிலும் சூராவிலும் சமய உரையை ஆற்றக் கூடாது என்ற மாநில சுல்தானின் உத்தரவை மீறி நடக்க முற்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரை அளித்துள்ள திரெங்கானு பிகேஆர் தலைவர் ராஜா கமாருல், ஒரு தவணை காலம் மாநில மந்திரி பெசாராக இருந்துள்ள ஹாடி அவாங், சுல்தானின் உத்தரவை மீறி பள்ளிவாசல்களில் சமய உரையை நிகழ்த்துவதில் விடாப்பிடியாக இருப்பதால் அவர்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஹாடி அவாங்கின் செய்கையானது பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்றும் மாநில சமயத் தலைவராக இருக்கும் சுல்தானின் உத்தரவை மீறுவது ஒரு அரசியல்வாதிக்கு அழகல்லவென்றும் ராஜா கமாருல் சாடினார்.



