27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

வரம்பு மீறி நடந்து கொண்ட பாஸ் கட்சி உறுப்பினர் அவையிலிருந்து வெளியேற்றம்

🔥 Views : 2
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின் முடிவுரையை நிகழ்த்திய பொருளாதாரத் துறை அமைச்சர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) யைத் தொடர்ந்து சீண்டி, அவரின் உரைக்கு குறுக்கீட்டைச் செய்து வந்த பாஸ் கட்சியின் பெண்டாங் எம்பி Awang Hashim (அவாங் ஹாசிம்) மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரை அவையிலிருந்து வெளியேற்றியதோடு, இரு நாள்களுக்கு சபையிலிருந்தும் நீக்குவதாக சபாநாயகர் ஜொஹாரி அப்துல் உத்தரவிட்டார்.
ரபிஸின் உரையைத் தடுக்க வேண்டாமென அவாங்கிற்கு பல முறை எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், அதனை அவர் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்ததால், ஜொஹாரி அவரை அவையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles