
🔊To listen to this news in Tamil, Please select the text.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் திருடர்களை மன்னிக்கக் கூடாதென்றும் அவர்களுக்குத் தக்க தண்டனையளித்து, களவாடிய பணத்தை திரும்பப்பெற தாம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
தம்மைத் தாக்கி கொடுமைப் படுத்தியோரை மன்னித்தாலும், அரசின் பணத்தைக் களவாடிய கயவர்களைத் தாம் மன்னிக்கப் போவதில்லை என்றும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



