34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஆட்சியைக் கவிழ்க்கும் ஹாடி அவாங்கின் நடவடிக்கையை விசாரணை செய்ய வேண்டும்

🔥 Views : 3
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க பெரிக்காத்தான் நடவடிக்கை எடுத்துவருவதாகச் சூளுரைத்திருக்கும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜெலுத்தோங் எம்பி ஆர் எஸ் என் ராயர் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
பேரரசரின் உத்தரவிற்கிணங்க பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவக்கியிருக்கும் ஆட்சியை ஜனநாயகத்திற்கு விரோதமாகக் கவிழ்த்து, கைப்பற்றுவது ஜனநாயகத்திற்கு முரணான செயலென்றும் அவர் விமர்சித்தார்.
அவரின் உரையை எதிர்க்கட்சியினர் கடுமையாகத் தாக்கி கூக்குரல் இட்டு, ராயரின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
நேற்று முன்தினம், நாடாளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹாடி அவாங், ஆட்சியைக் கவிழ்க்கத் தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் அது அரசியலில் இயல்பான நடவடிக்கை என்றும் ஜனநாயகத்தில் காணப்படும் மாற்றம் என்பதால் அதனைப் பேரரசர் ஏற்க மறுக்க மட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles