
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவின் மேல்மட்ட இரு முக்கிய பதவிகளுக்கான போட்டியைத் தவிர்க்கும் அனுமதியை அளித்திருக்கும் உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமென பெரிக்காத்தான் நாடாளுமன்ற கொறடா தக்கியுடின் ஹசான் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
சைஃபுடின் தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அனுமதியைத் அளித்திருப்பதாகக் கூறியிருப்பது அதிகாரத் துஷ்பிரயோகம். அது சங்கங்களின் சட்டத்திற்கு முரணான செயலென அவர் சுட்டிக்காட்டினார்.
அம்னோவுக்கு இந்தச் சிறப்புப் சலுகையை அளித்திருப்பதால், இந்த அனுமதியானது மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துமா என்பதையும் சைஃபுடின் விளக்கமளிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.



