
🔊To listen to this news in Tamil, Please select the text.
1எம்டிபியிலிருந்து களவாடப்பட்ட 70 விழுக்காடு அல்லது 1,893 கோடி ரிங்கிட் மீட்கப்பட்டதாகவும் இன்னும் 30 விழுக்காடு தொகையை பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கும் நடவடிக்கையை ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஆணையர் Azam Baki (அஸாம் பாக்கி) தெரிவித்தார்.
அபு தாபியின் இரு நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அண்மையில் 180 கோடி டாலர் (806 கோடி ரிங்கிட்) அரசு பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாரா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள 15.7 கோடி ரிங்கிட் ஊழல் சம்பந்தமான விசாரணை இன்னமும் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.



