31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மருத்துவமனை இயக்குநர் செனட்டராக நியமனம்: ஜசெகவினர் கடும் எதிர்ப்பு

🔥 Views : 2
👁 Reading Now : 21

🔊To listen to this news in Tamil, Please select the text.

நேற்று நடந்த பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் சுங்கை பாக்காப் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஏ. லிங்கேஸ்வரனும் வர்த்தகர் அமிர் மாட் கஸாலியும் செனட்டர்களாகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
15ஆவது பொதுதேர்தலில் போட்டியிடும் வகையில் செனட்டர் பதவியில் இருந்து விலகிய லிம் ஹுய் யிங் மற்றும் ஃபட்லினா சீடேக்கிற்கு பதிலாக மேற்கண்ட இருவரும் பினாங்கின் சார்பில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜசெகவில் சேர்ந்து 4 மாதமே ஆன லிங்கேஸ்வரனை அப்பதவியில் நியமிக்கப்பட்டதை 24க்கும் மேற்பட்ட ஜசெக கிளைகள் கடுமையாக எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியுள்ளன.
கட்சிக்கு எந்தவிதமான சேவையையும் வழங்காமல் இருக்கும் லிங்கேஸ்வரனுக்கு அப்பதவி அளிக்கப்பட்டது கட்சியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மஇகாவை ஆதரிப்பவர்கள் என்றும் அவரின் நியமனத்தைத் தாங்கள் நிராகரிப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles