31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அம்னோவுக்கு இறுதி முடிவு கட்டப்படும்

🔥 Views : 4
👁 Reading Now : 47

🔊To listen to this news in Tamil, Please select the text.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தொடர்ந்து பெர்சத்துவை வழி நடத்துவார் என்று அக்கட்சியின் பேராளர்கள் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
1,041 பேராளார்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் உரையாற்றிய முஹிடின், தம்மிடம் தோற்றுப்போன அம்னோவுக்கு வரும் 16ஆவது பொதுத்தேர்தலில் இறுதி முடிவு கட்டப்படும் என எச்சரித்தார்.
இந்நாட்டில் மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகத்தின் மிகப் பெரிய சக்தியாக பெர்சத்து உருவெடுத்து வரும் நிலையை எதிர்கொள்ள முடியாமல் அதன் தலைவர்கள் மீது அரசு ஊழல் வழக்குகளைத் தாக்கல் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
15ஆவது பொதுத்தேர்தலில் 60 விழுக்காடு மலாய், பூமிபுத்ரா ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதை அடுத்து, அடுத்த பொதுத்தேர்தலில் தமது கூட்டணியான பெரிக்காத்தான் நிச்சயமாக ஆட்சியைக் கைப்பற்றி எதிரிகளைப் பந்தாடும் என அவர் சூளுரைத்தார்.
14ஆவது பொதுத்தேர்தலில் பெர்சத்துவுக்கு 13 தொகுதிகளையும், 15ஆவது தேர்தலில் 31 தொகுதிகளையும் பெற்று 16ஆவது தேர்தலில் அம்னோவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவது நிச்சயம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles