
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது இந்த அரசு வழக்கு தொடுப்பது அராஜக ஆட்சியை நிரூபிப்பதாகப் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டினார்.
நேற்று முன்தினம் கோம்பாக்கில் உள்ள தமது தலைமையகத்தில் சமய உரை ஆற்றும்போது, எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கவும், அவர்களின் விமர்சனங்களை அடக்கி ஒடுக்கவும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது கொடுங்கோல் ஆட்சியைப் போன்றது என அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தானின் மாபெரும் வளர்ச்சியையும் அது மாநிலத் தேர்தல்களில் அதன் அபார வெற்றியைத் தடுக்கும் விதத்திலும் ஆதாரமில்லாத வழக்குகளைத் தலைவர்களின் மீது சுமத்துவதைத் தடுக்க மக்கள் பெரிக்காத்தானுக்கு வற்றாத ஆதரவை வழங்கி ஆட்சியைக் கைப்பற்ற உதவி செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.



