
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசாங்க மருத்துவமனைகளில் ஆபத்து அவசரப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதைச் சமாளிக்க ஒப்பந்த மருத்துவர்களும் தனியார் துறை மருத்துவர்களும் அரசுக்கு உதவ முன்வர வேண்டுமென சுகாதார அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா கேட்டுக் கொண்டார்.
நெரிசலைக் குறைக்க கிள்ளான் பள்ளத்தாக்கில் 52 சுகாதார கிளினிக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் சேவை நேரம் வழக்க நேரத்திற்குக் கூடுதலாக மாலை 5 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரையும் சனிக்கிழமைகளில் காலை 8 லிருந்து மதியம் வரை திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.
எனவே, அரசின் சுகாதார உதவியாளர்களின் வேலைச் சுமையைக் குறைக்க ஒப்பந்த மருத்துவர்களும் தனியார் துறை மருத்துவர்களும் உதவ முன்வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



