
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசியல் கட்சிகளை நடத்த உறுப்பினர்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்களின் அரசியல் நன்கொடை அத்தியாவசியமாகத் தேவையென பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.
கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் அரசியல் நன்கொடையைப் பெற்ற பெர்சத்து தலைவர்கள் மீது கொடூர வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கும் இந்த அரசு, தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கூட்டணிகளின் மீதும் விசார்ணை செய்ய வேண்டுமென அவர் சவால் விடுத்தார்.
அரசின் கைப்பாவையாக விளங்கும் ஊழல் தடுப்பு ஆணையம், பாகுபாடில்லாத, சுதந்திரமான அமைப்பு என்பதை நிரூபிக்க பக்காத்தான், தேசிய முன்னணியின் மீதும் வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென முஹிடின் சவால் விடுத்தார்.



