
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் ஊழல் வழக்குகளில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது கட்சிக்குப் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
முஹிடினை அடுத்து பெர்சத்துவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் Wan Saiful Wan Jan a ,வான் சைஃபுல் வான் ஜானும், சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் Adam Radlan Adam Muhammad (அடாம் ரட்லான் முகமட்) ஆகியோர் மீது பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான ஜானா விபாவா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் பெருந் தொகையிலான கையூட்டைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது கட்சிக்குப் பெரும் களங்கத்தையும் நற்பெயருக்கு சிறுமையையும் ஏற்படுத்தி உள்ளதாக பேராசிரியர் Jeniri Amir ஜெனிரி அவாங்கும் Awang Azman Pawi (அவாங் அஸ்மான் பாவியும்) குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் பரப்புரைகளில் தேசிய முன்னணியை விட பெர்சத்துவே மலாய்க்காரர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருப்பதாகவும் அது லஞ்சம் வாங்காத கட்சி என மார் தட்டியது இனி மேலும் மக்களிடையே எடுபடாது.
பொதுமக்கள் இனிமேலும் புனிதர்கள் கொண்ட கட்சியாக பெர்சத்துவை நம்பத் தயாராக இல்லையென்பதால் வரவிருக்கும் 6 மாநிலத் தேர்தல்களில் அக்கட்சி தோல்வியைத் தழுவும் என்றும் கூறப்படுகிறது.



