25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தீயணைப்பு மீட்புப் படையினரின் சேவைக்கு பிரதமரின் பாராட்டு

🔥 Views : 3
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

தீயாணைப்பு மீட்புப் படையினரின் அளப்பரிய சேவைக்கு ஈடு இணையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தம்புன் தீயணைப்பு நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பது மட்டுமல்லாது, மனித உயிர்களைக் காப்பது, சொத்துகளைச் சேதமின்றி காக்கவும் செய்வதாகத் தெரிவித்தார்.
அவர்களின் துரித செயல்பாடுகளின் மூலம் சொத்துகள் மீதான சேதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தீயணைப்பு வீரர்களின் சேவையைப் பாராட்டும் விதத்தில் அதற்கான மானியம் அதிகரிக்கப்படுவதாகவும் நாட்டின் பொருளாதாரம் மீட்சி கண்டால், ஒதுக்கீடுகள் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles