
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்குகள் யாவும் ஆதார அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளதால் முஹிடினும் அவரது ஆதரவாளர்களும் அந்த வழக்குகள் யாவும் பழிவாங்கும் செயலென கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
அவரின் ஊழல் நடவடிக்கைகள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டு சட்டத்துறைத் தலைவரின் ஒப்புதலின்படி அவரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. எனவே, பழி வாங்கும் நடவடிக்கை என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்காமல் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு முஹிடின் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டுமென அன்வார் அறிவுறுத்தினார்.
முஹிடினின் புகார் பற்றிக் குறிப்பிட்ட சட்டத்துறைத் தலைவர், ஒருவர் மீது குற்றம் சாட்டுவதானது, விசாரணையில் கண்டறியப்பட்ட உண்மைகள், ஆதாரங்களின் அடிப்படையில்தான் என்றும் அது ஒரு தரப்பாரின் நெருக்குதலின் காரணமாக அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.



