
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை தற்காக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை ஊழல் தடுப்பு ஆணைய வளாகத்தில் ஆதரவுக் கூட்டத்தை நடத்தியோரைப் போலீஸார் அடையாளம் கண்டிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Azmi Abu Kassim (அஸ்மி அபு காசிம்) தெரிவித்துள்ளார்.
அது சம்பந்தமான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்து கொண்டோரின் வாக்குமூலம் பெறப்பட்டு சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை ஜானா விபாவா பூமிபுத்ரா குத்தகையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தில் நிதி முறைகேடு சம்பந்தமாக முஹிடின் யாசின் எம்ஏசிசியினால் கைது செய்யப்பட்டு, மறுநாள் அவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



