29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வரி விலக்கை நானா ரத்து செய்தேன்?
முஹிடின் மீது வழக்கு பாயும்

🔥 Views : 2
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

ayasan Al Bukhari (யயாசான் அல்-புக்காரி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த வரி விலக்குச் சலுகையை தாம் ரத்து செய்ததாகக் கூறியிருக்கும் முஹிடின் யாசின், தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ள வேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.
முஹிடின் தமது ஆதாரமற்ற குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளத் தவறினால் அவர் மீது நிந்தனை வழக்கைத் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
அல் புக்காரி நிறுவனத்திற்கான வரி விலக்கைத் தமது நிதியமைச்சர் காலத்தில் ரத்து செய்ததில்லை என்றும் தம்மீது சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுகளைத் திசை திருப்பவே அவர் தம்மீது பழி சுமத்தி, தமக்கு எதிராக மக்களைத் தூண்டுவதாக குவான் எங் குற்றம் சாட்டினார்.
சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய முஹிடின் யாசின், 2018இல் நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங் அல் புக்காரி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த வரி விலக்கை ரத்து செய்ததோடு, செலுத்தப்படாத வரிக்கு 45 விழுக்காடு தண்டத்தையும் விதித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
புக்காரி இக்குவிட்டி நிறுவனத்திலிருந்து முஹிடின் 19.5 கோடி நிதியை சட்டத்திற்குப் புறப்பாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles